ஒரு வாசகனின் மனப்பதிவுகள்

Wednesday, February 02, 2005

தாமிரபரணி என்றால் இலங்கை!

திருநெல்வேலிக்காரர்களின் மனதிற்கு இனிப்பான விஷயம் அல்வா அல்ல, தாமிரபரணி. தமிழுக்கு அடுத்தபடியாக அவர்கள் உரிமையோடு பெருமைப்பட்டுக் கொள்கிற விஷயம் அந்த நதி.

பொதிகை மலையில் தோன்றி வங்கக்கடலில் கலக்கும் அந்த நதியின் பயணம் சில நூறு கிலோமீட்டர்கள்தான். ( 70 மைல்) ஆனால் அதன் வரலாறு மிகப் பெரியது. வடமொழியில் உள்ள மகாபாரதத்தில். "குந்தியின் மகனே! மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்" என்று ஒரு முனிவர் தர்மனைப் பார்த்துச் சொல்வதாக ஒரு பாடல் உண்டு. காளிதாசனின் ரகு வம்சத்திலும் தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் விளைந்த உயர்தர முத்துக்களைக் கொண்டு வந்து ரகுவின் காலடியில் பணிந்ததாக ஒரு பாடல் உண்டு. காளிதாசன் கிறிஸ்துவிற்கு ஓராண்டு முன் பிறந்தவன்.

இதன் ஒரு கிளைநதியான சித்ராநதிதான் குற்றாலத்தில் அருவியாக விழுகிறது."உலக்த்திலேயே மிக அருமையானதும், தூய்மையானதுமான நீராடுதுறை குற்றாலமே என்று துணிந்து கூறுதல் சற்றும் மிகையாகாது"என்று கால்டுவெல் எழுதுகிறார்.வெள்ளைக்காரர்கள் சொல்வது கிடக்கட்டும். திருநெல்வேலிக்காரர்களைக் கேட்டால் தாமிரபரணியில் எங்கு குளித்தாலும் புண்ணியம் என்று சொல்வார்கள்.

திருநெல்வேலிக்காரர்களின் 'செண்டிமெண்ட்'டோடு இப்படிக் கலந்து விட்ட நதி தாமிரபரணி.ஆனால் தாமிரபரணி என்ற சொல் நதியைக் குறித்தது அல்ல, அந்தச் சொல் இலங்கையைக் குறிப்பது என்கிறார் கால்டுவெல்!

தாமிர என்றால் சிவப்பு. பரணி என்றால் இலை. தாமிரபரணி என்றால் சிவப்பு இலைகளைக் கொண்ட மரம் ( ஒரு வேளை கனடாவின் Maple மரமோ?) என்றுதான் பொருள்படும். இந்தப் பெயர் மரத்துக்குப் பொருந்தலாம். நதிக்கு எப்படி பொருந்தும்?

சிவப்பு மலர்களை உடைய நீர்த்தேக்கம் என்ரு ஒருவர் விளக்க முற்படுகிறார். அது ஏற்புடையதாக இல்லை என்று தள்ளி விடும் கால்டுவெல் வேறு ஒரு விளக்கம் தருகிறார்:

"இந்தப் பெயர் இலங்கையின் பழம் பெயராய் இருந்தது என்பது கருதத்தக்கது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் முற்காலத்து புத்த மதத்தினரால் அது (இலங்கை) தாம்ரபன்னி (Tambapanni) என்று வழங்கப்பட்டது என்பது ஜிர்னரில் (Girnar) உள்ள அசோக மன்னன் கல்வெட்டிலிருந்து தெரிகிறது. மகா அலெக்சாந்தரின் காலத்தில் இந்தியாவிற்கு வந்த கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றியும், அதிலுள்ள் நாடுகளைப் பற்றியும் அந்நாட்டில் வாழும் மக்களைப் பற்றியும், அதன் அருகே உள்ள நாடுகளைப் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது இந்தியாவை அடுத்துப் பெரியதொரு தீவு உள்ளதென்பதும், அதன் பெயர் தப்ராபனி (Taprobane) என்பதும் அறிந்தார்கள். தப்ராபனி என்பது தாம்ரபன்னி என்பதன் தவறான உச்சரிப்பே ஆகும்.
தம்ராபன்னி அல்லது வடமொழியில் சரியாக எழுதப்பட்ட பெயரான தாம்ரபரணி என்பது விஜயனும் அவனுடைய கூட்டத்தாரும் இலங்கையில் குடியேறிய முதற் நிலப்பகுதிக்கு இட்ட பெயர் என்பதும், அப்பெயரிலிருந்து முழுத்தீவுக்கும் அப்பெயர் வந்தது என்பதும் மகாவமிசத்தில் குறிக்கப்பட்டுள்ளன (Turnourன் மகாவமிசம் பக்கம் 57)


இந்தக் குடியிருப்பு சிலோனின் மேற்குக் கடற்கரையில் உள்ள புட்லம் என்ற ஊரின் அருகே உள்ளது ( புத்தளத்தைச் சொல்கிறாரோ?) என்று தெரிகிறது. இது ஏறக்குறைய திருநெல்வேலியின் முக்கிய ஆற்றின் கூடுதுறைக்கு எதிரே அமைந்துள்ளது. இந்த இரு பெயர்களும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாஸ்டனும், இங்கிலாந்தின் பாஸ்டனும் போல ஒரு பொதுவான மூலத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் கொள்ளலாம்"என்று எழுதியிருக்கிறார் கால்டுவெல்.

என்னுடைய சந்தேகங்கள் எல்லாம் இவைதான்:

  1. இலங்கைக்கு தாமிரபரணி என்று பெயர் உண்டா?
  2. விஜயனும் அவனது கூட்டத்தினரும் எங்கிருந்து போய் இலங்கையில் குடியேறினார்கள்? தென் தமிழ் நாட்டிலிருந்தா? (கலிங்கத்திலிருந்து என்று படித்த நினைவு)
  3. பாண்டியன் மகளை விஜயன் மணந்ததாகச் சொல்வார்கள். அதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
  4. இலங்கையில் ஒரு திருநெல்வேலி இருக்கிறதல்லவா? அந்தப் பெயர் அதற்கு எப்படி ஏற்பட்டது?


யாராவது என் சந்தேகங்களுக்கான விடைகளைத் தர முடியுமா?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

7 Comments:

Blogger kirukan said...

அப்துல்ரகுமான் அவர்கள் சிலவருடங்களுக்கு முன் தமிழ் வார இதழொன்றில் இதைப்பற்றி தொடராக எழுதினார்.

அவர் விஜயனை வங்காளத்தில் இருந்து வந்ததாக குறிப்பிடுகிறார். அன்றைய கலிங்கம் இன்றைய வங்காளம் மற்றும் ஒரிசா பகுதிகளை உள்ளடக்கியது தான் என நினைக்கிறேன். மேலும் பாண்டியனின் மகளை விஜயன் மணந்தது பற்றியும் எழுதியிருந்தார். அவர் தொடரை முடிக்கும் பொழுது தமிழினமும் சிங்கள இனமும் ஒன்றே. மதமும் காலமுமே அவர்களை விரோதிகளாக்கியதாக குறிப்பிடுகிறார்.

ஈழ வரலாற்றைப்பற்றி தெரிந்தவர்கள் விளக்கினால் நானும் தெளிவு பெறுவேன்.

12:39 AM

 
Anonymous Anonymous said...

«ýÒûÇ Á¡Äý

±ÉÐ ¦º¡ó¾ °÷ ¾¡Á¢ÃÅÕ½¢ì ¸¨Ã¢ø «¨ÁóÐûÇ ´Õ ¸¢Ã¡Áõ. þô¦À¡ØÐ «ó¾ ¿¾¢Â¢ý «ÆÌõ, §À¡ìÌõ ¸¡Î §À¡ø ÅÇ÷óÐûÇ ¸Õ§ÅÄõ Óû ÁÃí¸Ç¢É¡ø «Æ¢óÐ ÅÕ¸¢ÈÐ. µÎõ ¿¾¢Ôõ, «¸ñ¼ Á½üÀÃôÒõ ¸¡½¡Áø §À¡ö, ¬ü¨Èô À¡÷츧Šþô¦À¡Ø¦¾øÄ¡õ ÅÕò¾Á¡¸ þÕ츢ÈÐ. ¾¡Á¢ÃÅÕ½¢ ¬üÈ¢ø «¾¢¸õ ¾¡Á¢Ã ¯§Ä¡¸õ þÕôÀ¾¡ø «¾üÌ ¾¡Á¢Ãõ ÅÕõ ¿£÷ ±ýÚ ¦ÀÂ÷ Å󾾡¸×õ ÜÚÅ¡÷¸û. ¯ñ¨Á¾¡É¡ ±ýÀÐ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ºÃ¢ À¡÷òÐì ¦¸¡ûÇ×õ.

«ýÒ¼ý
º.¾¢ÕÁ¨Ä

3:59 AM

 
Blogger Vijayakumar said...

மாலன் அண்ணாச்சி,

வரலாறு சான்றுகள் தவிர வாய்மொழியாக எங்கள் தாத்தா முந்தி பின்னூட்டமிட்ட திருமலையைப் போல தான் சொல்வார்கள். தாமிரபரணியை தாமிரவருணியென்று சொல்வார்கள். 'தாமிரம் வரும் நீர்' திரிந்து தாமிரவருணியானதும் என்றும் சொல்வார்கள். தாமிரம் அதிகமிருப்பதால் தண்ணீர் ஒரு தனிச்சுவையுடன் இருப்பதாகவும் சொல்வார்கள். தாத்தா எந்த அளவு நீராய்ச்சி செய்து தாமிரம் இருப்பதை உறுதிச் செய்தார்களோ தெரியாது. இது வெறும் காது வழியாக வந்த செய்திகளே. தாமிரத் தண்ணீருக்கு ஆதாரம் இருப்பதாக என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை.

6:53 AM

 
Blogger அன்பு said...

திருமலை அவர்களின் பின்னூட்டம் தமிழில்:

அன்புள்ள மாலன்

எனது சொந்த ஊர் தாமிரவருணிக் கரையில் அமைந்துள்ள ஒரு கிராமம். இப்பொழுது அந்த நதியின் அழகும், போக்கும் காடு போல் வளர்ந்துள்ள கருவேலம் முள் மரங்களினால் அழிந்து வருகிறது. ஓடும் நதியும், அகண்ட மணற்பரப்பும் காணாமல் போய், ஆற்றைப் பார்க்கவே இப்பொழுதெல்லாம் வருத்தமாக இருக்கிறது. தாமிரவருணி ஆற்றில் அதிகம் தாமிர உலோகம் இருப்பதால் அதற்கு தாமிரம் வரும் நீர் என்று பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். உண்மைதானா என்பது தெரியவில்லை. சரி பார்த்துக் கொள்ளவும்.

அன்புடன்
ச.திருமலை

8:55 AM

 
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

இலங்கையின் வடமேற்குக் கரையில்(மாந்தை துறைமுகத்துக்கு அண்மையில்) கரையிறங்கிய விஜயனும் தோழர்களும் இளைப்பாறுவதற்காக ஆற்றங்கரையில் உட்கார்ந்துவிட்டு எழுந்தபோது அவர்களின் கரங்கள் செந்நிறமாக மாறியதைக் கண்டு அந்த ஆற்றுக்கு(இடத்திற்கு) தாமிரபரணி எனப் பெயரிட்டார்கள்(தாமிரம்- செம்பு)அதுவே சிங்கள வம்சாவளித் திரிப்பில் தம்பபன்னி ஆகிவிட்டது.

விஜயனும் தோழர்களும் இந்தியாவின் லாலா நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.லாலா நாடு என்பது ஒரிசா என்பது ஆராய்ச்சியாளர் முடிவு.

இலங்கைக்கு தப்ரபேன் என்ற பெயர் இருந்தது.தம்பபன்னி இராட்சியத்தின் தலைநகராக இருந்திருக்கிறது.

இலங்கையில் திருநெல்வேலி என்றொரு இடம் உள்ளது.இப்போது திண்ணைவேலி என்று அழைக்கப்படுகின்றது.அதற்கும் இந்தியாவின் திருநெல்வேலிக்குமான தொடர்புகள் தெரியவில்லை.அதேபோல இலங்கையிலும் நாகர்கோவில் உண்டு.

8:56 AM

 
Blogger மாலன் said...

மேலே தகுதரத்தில் (TISCII) உள்ள anonymous கருத்தின் யூனிகோட் வடிவம்

அன்புள்ள மாலன்

எனது சொந்த ஊர் தாமிரவருணிக் கரையில் அமைந்துள்ள ஒரு கிராமம். இப்பொழுது அந்த நதியின் அழகும், போக்கும் காடு போல் வளர்ந்துள்ள கருவேலம் முள் மரங்களினால் அழிந்து வருகிறது. ஓடும் நதியும், அகண்ட மணற்பரப்பும் காணாமல் போய், ஆற்றைப் பார்க்கவே இப்பொழுதெல்லாம் வருத்தமாக இருக்கிறது. தாமிரவருணி ஆற்றில் அதிகம் தாமிர உலோகம் இருப்பதால் அதற்கு தாமிரம் வரும் நீர் என்று பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். உண்மைதானா என்பது தெரியவில்லை. சரி பார்த்துக் கொள்ளவும்.

அன்புடன்
ச.திருமலை

8:58 AM

 
Anonymous Anonymous said...

Dear Malan

My previous posts created some font problem it seems. So please bear with my English. My father told me that he used to collect traces of copper from the underwater sand. That was his swim time hobby. It may be true that the river was bringing in mineral traces from the western ghats with it downstream. Still illegal minings are going on in Kalakad mountain forest ranges in search of diamonds. Another interesting news about Tamiravaruni was the usage of that water in the making of Tirunelveli Halwa. Recently I read this somewhere: 'one of the Halwa makers found the secret of the taste comes from that water'. Last time when I visited my village, I rushed to see the river side, but for my huge dissapointment, it was covered with a Mulluk kaadu. Can the Govt or other agencies do something to bring it's beauty back?

Anbudan
S.Thirumalai
strajan123@yahoo.com

12:08 AM

 

Post a Comment

<< Home

 
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது